திருச்செந்தூர், ஆக.7-
முன்னாள் முதல்வர் கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்செந்தூர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
தி.மு.க.,வின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருச்செந்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, காயாமொழி, தேரிக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவ மாணவியர்கள் 13 பேர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசும், பதக்கமும், இரண்டாமிடம் பெற்ற 14 மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்க பரிசும், பதக்கமும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஜெபராஜ், ராஜபாண்டி, ஸ்ரீதர் ரொட்ரிகோ, சாமுவேல்ராஜ், ராஜமோகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் லதா கலைச்செல்வன், இசக்கிமுத்து, சுதாகர், கிருபாகரன், சாத்ராக், சிவசுப்பிரமணியன், கேடிசி முருகன், சிவராஜ் சாக்ரடீஸ், தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணல்மேடு சுரேஷ், நகர துணை செயலாளர்கள் ஆனந்தராமச்சந்திரன், தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.