’ஆழ்வார்திருநகரி விவசாயிகள் பயிர் இழப்பை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்யுங்கள்’ – வேளாண்மைத்துறை வேண்டுகோள் !

0
24

நாசரேத் ஜுன்.28:ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் பெருமக்களுக்கு ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் தற்போது கார் பருவத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல் வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பொழுதும் பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும்; பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவிற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே பிரிமியத் தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பிட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரீமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை விதைப்பு பொய்த்தல் மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்புகள் உள்ளன.
கார் பருவ நெல் பயிருக்கு 31.07.2019 க்குள் பிரீமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதி முறைகளுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது.

விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.538 மட்டும் செலுத்த வேண்டும் . இது கடன்பெறும் மற்றும் கடன் பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.26900 வரை கிடைத்திட வாய்ப்புள்ளது.மேலும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.15750 பெற பிரீமியத்தொகை ரூ.315ம் நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.17300 பெற பிரீமியத்தொகை ரூ.346ம் பருத்திபயிருக்கு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.17050 கிடைத்திட பிரீமியத்தொகை ரூ.853ம் செலுத்த வேண்டும்

உளுந்து நிலக்கடலை பருத்தி பயிர்களுக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாள் 16.08.2019 ஆகும்.
விவசாயிகள் பிரீமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையங்களிலும் நில அடங்கல் ஆதார் கார்டு நகல் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் செலுத்தலாம். இது குறித்து விவசாயிகளிடையே கிராமங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் அலுவலர் துணை வேளாண் அலுவலர் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி; தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here