அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பிற்கு உதவ அதிகாரம் செலுத்தும் ரஷ்யா

0
114
rasya

வாஷிங்டன்: நவம்பரில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பிற்கு உதவ தொடர்ந்து ரஷ்யா அதிகாரம் செலுத்தி வருகிறது. மேலும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை இழிவுபடுத்த பல்வேறு நுட்பங்களை பயன்படுத்துகிறது என அமெரிக்க புலனாய்வு மற்றும் பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடக்கவுள்ளது.இத்தேர்தலில் தற்போதைய அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பிற்கும், முன்னாள் அமெரிக்க துணை அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பிடனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகளில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் உள்ளன என அமெரிக்க புலனாய்வு மற்றும் பாதுகாப்பு மையத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு மற்றும் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) தலைவர் வில்லியம் இவானினா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற சீனா விரும்பவில்லை என்றும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனை காயப்படுத்த ரஷ்யா விரும்புகிறது.

வெளிநாட்டு வாக்காளர் விருப்பங்களைத் திசைதிருப்பவும், அமெரிக்க கொள்கைகளை மாற்றவும், “நாட்டில் கருத்து வேறுபாட்டை அதிகரிக்கவும்” முயற்சித்து வருகின்றன. மேலும் நமது ஜனநாயக வழிமுறையில் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. எப்படியிருந்தாலும், நமது எதிரிகளுக்கு வாக்களிப்பு முடிவுகளில் தலையிடுவது சற்று கடினமானதுதான் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here