ஸ்ரீவைகுண்டம், ஆக.8:
கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதாராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமை வகித்தார்.
மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் , வழக்கறிஞர் கிருபாகரன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் கலீல் ரகுமான் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பட்டன், மாவட்ட தொழில் நுட்ப அணி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குளம் தெற்கு ஒன்றிய பகுதிகளான திருவரங்கம்பட்டி , அரியநாயகபுரம், மணல்விளை, இராமானுஜம்புதூர் , செய்துங்கநல்லூர் , கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, துப்புரவு பணியாளர் மற்றும் ஏழை-எளிய பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களும் ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர், கருங்குளம் மருத்துவமனை செவிலியர்களுக்கு முக கவசம் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனராஜ், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீரங்கன், ஒன்றிய துணை அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன், கிளை செயலாளர்கள் தர்மலிங்கம், முருகேசன், முத்துசாமி, பூல்பாண்டி அலிபேக், இசக்கி, ராமச்சந்திரன், சித்திரை பாண்டியன், சிவசுப்பிரமணியம், முத்து பலவேசம், ஐயப்பன், முத்துராமலிங்கம், முத்தையா, காஜா முகைதீன் துரை, கால்வாய் இராமையா, மூர்த்தி, முருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.