மழை வருவதற்குள்.. கொரோனா ஊரடங்கு முடிவதற்குள்.. தூத்துக்குடி தற்காலிக பேருந்துநிலையம் சீரமைக்கப்பட வேண்டும்

0
270
thoothukudi old bus stand

காலத்தே பயிர் செய் என்பார்கள் பெரியவர்கள். ஆம் குறித்த நேரத்தில் உரியதை செய்து முடிக்க வேண்டும் என்பதே அவ்வார்த்தையின் நோக்கம். அப்படித்தான் செய்து முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது, தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகில் இருக்கும் தற்காலிக பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணி.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட்டு விட்டபடியால் பல்வேறு வேலைகள் அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பழைய பேருந்து நிலைய பணியும் ஒன்று. ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தில் பழைய பேருந்துநிலையம் புதுமை பெறும் நோக்கில் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட வேலை முடியும் வரை தற்காலிக பேருந்துநிலையமாக அதன் அருகில் இருக்கும் எஸ்.ஏ.வி கிரவுண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் நாம் சொல்ல வருவது என்ன வென்றால்.. மிக விரைவில் மழைகாலம் வரப்போகிறது. பழைய பேருந்துநிலைய பணிகள் உடனே நடந்துமுடிந்துவிட போறதில்லை. அதற்கு இன்னும் பல மாந்தங்கள் ஆகலாம். அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். அது வரை இந்த எஸ்.ஏ.வி கிரவுண்ட் யைத்தான் தற்காலிக பேருந்துநிலையமாக பயன்படுத்தி ஆக வேண்டும்.

அப்படியானால் அந்த கிரவுண்ட்யை நல்ல முறையில் உருவாக்கி வைப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். ஏற்கனவே கொரோனா வருவதற்கு முன்பு சில நாட்கள் மட்டும் பெய்த மழையில் தற்காலிக பேருந்துநிலையம் தண்ணீரும் சகதியுமாக அல்லாடியதை பார்த்திருக்கிறோம்.

மிக விரைவில் மழைகாலம் வரப்போகிறது என்றால் பழைய நிலை வரலாம். பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகள் அவஸ்தைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை கருத்தில் கொண்டே தற்போது அங்கு சில பொருட்கள் கொட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. மாநகராட்சி நிர்வாகம் மழைக்கு முன்பாக நடவடிக்கையில் இறங்கிவிட்டதை பார்க்க முடிகிறது.

என்றாலும் அவர்கள் கொட்டியிருக்கும் சாலையில் இருந்து பெயர்த்தெடுத்த தார் கழிவு, அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்யுமா என்பது சந்தேகமே. ஏற்கனவே அந்த கிரவுண்ட் பள்ளமாக இருக்கிறது. மழைநீர் வெளியேற முடியாத வகையில் அமைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது அந்த கிரவுண்ட் முழுமையாக உயர்த்தப்பட வேண்டும். அல்லது மழை நீர் வற்றுவதற்கோ அல்லது வடிந்து ஓடுவதற்கோ வழி செய்ய வேண்டும்.

மழை நீர் வெளியேறும் அளவிற்கு உயர்த்த முடியுமா என்பது சந்தேகமே. அதேபோல் தண்ணீரை வழிந்து ஓட செய்வதும் கடினமே. அப்படியானால் தண்ணீரை வற்ற செய்வது மட்டுமே முடியும். அப்படியானால் தண்ணீரை உறுஞ்சுகிற மணலை அங்கே கொட்ட வேண்டும். அப்போதுதான் அது அடிக்கடி தண்ணீரை உறுஞ்சி காய்ந்த நிலைக்கு வரும். ஆனால் தற்போது இவர்கள் கொட்டியிருக்கும் தார் கழிவு அதுபோன்று எந்த தண்ணீரையும் உறுஞ்சவோ தண்ணீரை வற்றசெய்யவோ விடாது. உண்மையாக கேட்டால் தண்ணீர் வற்றவே வற்றாது.

தார் கழிவு கொட்டப்படுகிறது என்றால் வெளி ரோடு அளவிற்கு அந்த கிரவுண்ட் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைக்கும் கிரவுண்ட் கிடைக்கும். பள்ளத்துக்குள் தார் கழிவை போட்டு நிரப்புவதாக இருந்தால் அது மழை காலங்களில் எல்லோரையும் சங்கடபடுத்திவிடும். எனவே கொரோனா ஊரடங்கால் பேருந்து நிலையம் தற்போது முழுமையாக இயங்கவில்லை. இந்த கால இடைவெளிக்குள் விரைந்து பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

அதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக பேருந்துநிலையத்தை முழுமையாக ஆய்வு செய்து சரியான பணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

– நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here