சென்னை காவல் ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவு, திண்டுக்கல் மாவட்ட எஸ் பி ஆகியோர்களுக்கு ராஷ்ட்ரிய இந்து மகா சார்பில் அதன் தென்மண்டல பொதுச் செயலாளர் ப.சி.மாவீரபாண்டியன், தென்மண்டல மகளிரணி தலைவி மா. செல்வக்கனி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜி.மாடசாமி ஆகியோர் சார்பில் தனித்தனி மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “தினங்களுக்கு முன்பு பழனி நகரத்தில் சாலை அகலப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையினரால் சாலையை பெரிதுபடுத்திக் கொண்டிருந்தனர். அங்கு பெரியார் சிலை அகற்றுவதற்கான வேலை நடந்து கொண்டிருந்தது. திக, திமுக, விடுதலை சிறுத்தை கட்சியினர் பெரியார் சிலையை எடுக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்பொழுது சில விஷமிகள் பிரதமரையும் பாஜக அரசையும் மற்றும் இந்துக்களையும் இழிவாக பேசியுள்ளனர். தேவையற்ற வகையில் பாரதப்பிரதமரையும் பாஜக கட்சியின் அசிங்கமான வார்த்தைகள் பேசினர். எப்பொழுதும்போல் தமிழக அரசு இவர்களின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாரதப்பிரதமர் ஐயே அசிங்கமான வார்த்தையை இயல் பேசிய தீர்க்க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவதூறுகளை பரப்பி பொது மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்கள் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.