பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, காங்., மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: ”கொரோனா பரவலின் ஆரம்பம் முதல் 30 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தேன். அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை மக்களுக்கு அளிக்க பணியாற்ற கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா சிகிச்சை பெற செல்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.