காங்., கட்சிக்கு முழு நேர தலைவர் அவசியம்: சசி தரூர்

0
76
congress

புதுடில்லி: காங்., கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா உள்ள நிலையில், கட்சிக்கு முழு நேர தலைவர் அவசியம் தேவை என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். ஆனால், ‘ராகுல் மீண்டும் தலைவர் பதவியில் தொடர வேண்டும்’ என, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காங்., கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியதாவது: காங்., கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்ட போது நான் வரவேற்பு தெரிவித்தேன். ஆனால் அவர் நீண்ட காலம் அந்த சுமையை சுமக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும். காங்., கட்சி தலைமை முன்னெடுத்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here