சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை மரணம்

0
204
pauldurai

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்காக சென்ற இடத்தில் மரணம் அடைந்தனர். போலீஸார் தாக்கியதில்தான் அவர்கள் இறந்தனர் என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், எஸ்.ஐக்கள் உள்பட 10 பேர்கள் சிறைக்கு அனுப்பபட்டனர்.

இதில் எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நீரழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்று வந்தார். 14-ம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து மதுரையிலுள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டார். அவருக்கு கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்க்கப்பட்ட நிலையில் கொரோனோ தொற்றும் ஏற்பட்டதால் உடல் நிலை மேலும் மோசமாகியது. அவர் கடந்த 8ம் தேதி ஐசியூ வார்டிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று(10.08.2020) அதிகாலை உயிரிழந்தார்.

இவரது மனைவி மங்கையர்திலகம் தனது கணவருக்கு முறையான சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் தனது கணவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதுடன் சுய நினைவை இழந்து விட்டதாக கூறி தனது கணவருக்கு ஜாமீன் வழங்குவதுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க கோரி மதுரை மாநகர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here