பைக் மோதியதில் பிடானேரி ஊராட்சி தூய்மை காவலர் படுகாயம் – தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி

0
350
nazareth nes

நாசரேத், ஆக.10: நாசரேத் அருகே பைக் மோதியதில் கால்துண்டான பிடானேரி ஊராட்சி தூய்மைக் காவலர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல்துறையி னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத் அருகிலுள்ள பிடானேரி ஊராட்சி அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தூய்மைக்காவலராக பணியாற்றி வருபவர் தைலாபுரம் கோயில் தெருவை சேர்ந்த அமல்ராஜ் மனைவி விக்டோரியா. இவரும் இவருடன் பணிபுரிந்து வரும் அதே ஊரைச்சேர்ந்தசெல்லத்துரை மனைவி சுபா என்பவரும் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தூய்மைபணிக்கு பயன்படுத்தும் தள்ளுவண்டியை டி.கே.சி.நகருக்கு கொண்டு செல்வதற்காக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தள்ளிச் சென்றனர். ஜேம்ஸ் தோட்டத்திற்கு அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த பைக் இவர்கள் மீது மோதியதில் விக்டோரியா கால் துண்டானது. பைக்கை ஓட்டி வந்தது ஸ்ரீவைகுண்டம் யாதவர் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் சரவணன் என்பது பின்னர் தெரிய வந்தது.

உடனே அருகிலுள்ளவர்கள் பிடானேரி ஊராட்சி தூய்மை காவலரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கால் துண்டான விக்டோரியாவின் கணவர் அமல்ராஜ் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை வைத் தும், அவரது மனைவி மூலம் வரும் வரு மானம் வைத்தும் பிழைப்பு நடத்தி வந்தனர். இப்போது விக்டோரியா கால் உடைந்து மருத்துவமனையினால் சிகி ச்சை பெற்று வருவதினால் அமல்ராஜ் குடும்பம் நடத்த படாதபாடுபட்டு வருகி றார்.இவருக்கு அரசு ஏதும் உதவிட முன் வருமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here