ஏரல் அருகே கந்துவட்டி கொடுமை – தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் முன்பு குடும்பத்தினர் தற்கொலை முயற்சி

0
534
collector

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் பகுதியை சேர்ந்த கணேசன், வேளாங்கணி, தம்பதியினர் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வட்டிக்கு பணம் ரூபாய் 3-லட்சம் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு வாங்கி உள்ளனர்.

ஆனால் கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்திய பின்பும் இன்னும் பணம் தரவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறாராம். இதனால் மனவேதனை அடைந்த கணேசன், அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

எதிர்பாராத வேளையில் திடீரென மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட அங்கிருந்த காவல்த்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இது குறித்து சிப்காட் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here