பேய்க்குளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் – விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

0
49
pabanasam

சாயர்புரம், ஆக.13-

பேய்க்குளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கேட்டு சேர்வைகாரன்டம் கிராம விவசாய அபிவிருத்தி சங்கம் மற்றும் கூட்டாம்புளி விவசாய சங்கம் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்து.

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பகுதியிலுள்ள பேய்க்குளம் குளம் பாசன பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவாசய நிலங்களில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. மேலும், நெற் பயிர்கள் அறுவடை முடிந்த நிலங்களில் அடுத்த கட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆயுத்தமாகி வருகின்றனர். இந் நிலையில் பேய்குளம் தண்ணீறின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் நெற்பயிர் அறுவடை நடந்த நிலங்களில் வாழைக் கன்றுகளை பதிக்க இயலாமல் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.

இதனால் அடுத்த பருவ விவசாயம் இங்கே கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது பாபநாசம் அணைக்கட்டு வேகமாக நிரம்பி வருவதால் அணைக்கட்டின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கூடிய விரையில் அதன் முழுக் கொள்ளளவான 143 அடியை எட்டக்கூடும். அப்போது தண்ணீர் முழுவதும் வீணாக கடலில் திறந்து விட நேரிடும். இதனால் யாரும் பயன் பெறமுடியாது. மேலும், மழைக்காலம் ஆரம்பிக்க இன்னு ஒரு மாதமே உள்ளது. தற்போது வாழைப் பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்தால்தான் அவற்றை கருகாமல் காப்பாற்றி அடுத்த பருவ மகசூலை எடுக்க முடியும். எனவே பாபநாசம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு பேயக்குளம் பாசன பகுதிகளில் விவசாயம் தொய்வின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேர்வைகாரனம்டம் கிராம விவசாய சங்க தலைவர் பொன்ராஜ், கூட்டாம்புளி விவசாய சங்க தலைவர் பட்டுமுருகேசன் ஆகியோர் விவசாயிகள் சார்பில் மாவட்ட கலைக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here