சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் பலத்த பாதுகாப்பு

0
176
ticr murugan

திருச்செந்தூர், ஆக. 14

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் மட்டும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலம் நாளை(15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வழிப்பாட்டு ஸ்தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இக்கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில் கோயில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கோயில் வடக்கு நுழைவு வாயில் மற்றும் தெற்கு நுழைவு வாயில் மற்றும் கோயில் நுழைவு பகுதியான சண்முகவிலாச மண்டபம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர். திருச்செந்தூர் நகர பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கோயில் வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here