கோவில்பட்டியில் நாளை உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

0
19
WhatsApp Image 2019-06-29 at 1.01.34 PM

கோவில்பட்டியில் நாளை உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

கோவில்பட்டி இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது
வரலாற்று புகழ் மிக்க மருத்துவரும் மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சரும் சமூக சேவகரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் பிதான் சந்திரராய் அவர்களின் பிறந்த நாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடபடுகிறது

கோவில்பட்டி இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு மாரத்தான் கோவில்பட்டி பார்க் ரோடு நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி பழைய பேருந்து நிலையம், மாதாங்கோவில் தெரு, எட்டயபுரம் வளைவு ரோடு கதிரேசன் கோவில் ரோடு வழியாக சென்று செளபாக்யா மகாலில் முடிவடைகிறது
மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர் கருக்கு பரிசும் மாரத்தானை நிறைவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என்றும்,

இயந்திரமான வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் | உடல் பருமனை குறைக்கவும் குறைந்த வயதில் ஏற்படும் மாரடைப்பு,, சர்க்கரை நோய் போன்வற்றை தடுக்க வலியுறுத்தி ஆரோக்கிய மான வாழ்க்கையை வலியுறுத்தியும் உடற்பயிற்சியை அதிகபடுத்திட விழிப்புணர்வு மாரத்தான் ஜூன்-30 ம் தேதி காலை 6.45 மணிக்கு நடைபெற உள்ளது

மாரத்தானை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா தலைமையில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மாரத்தானில் மருத்துவர்கள் , மாணவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று இந்திய மருத்துவ கழகத்தின் செயலர் திருமதி.Dr.பத்மா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here