138 கோடி மக்களுக்கும் தேவைகள் பூர்த்தியாவதே உண்மையான சுதந்திரம்! – நாலுமாவடியில் மோகன் சி. லாசரஸ் பேச்சு!!

0
141

நாசரேத்,ஆக.15:இந்தியாவிலுள்ள 138 கோடி மக்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி யானால் மட்டுமேதான் உண்மையான சுதந்திரதின விழாவாகும் என்று நாலுமாவடியில் சுதந்திரதின கொடி யேற்றி வைத்து மோகன் சி. லாசரஸ் சுதந்திர தின உரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய தேவனுடைய கூடாரத்தில் 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சாம் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். இந்திய தேசத்தைக் குறித்தான பாடல் பாடப்பட்டது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் வேதத்திலிருந்து ஒருசிலவசனங்களை மேற்கோள் காட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-இந்திய தேசம் சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்து 74-வது ஆண்டு துவங்குகிறது. இந்நியாவிலுள்ள 138 கோடி மக்களில் ஒரு சிலர் மட்டுமே செல்வந்தராக உள்ளனர். 138 கோடி மக்களும் தங்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு,உடை,சாலைவசதி, மின்சாரவசதி பேன்றவை அனைவருக்கும் கிடைத்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் ஆகும்.

இந்த 74-வது சுதந்நிர தினவிழாவில் நம் இந்தியதேசம் சாபத்தில் இருந்தும், பாவத்தில் இருந்தும், வியாதிகளில் இருந்தும,கொள்ளை நோயில் இருந்தும், சேமம் அடையவும், வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பாதிக்கப்படாமலும் இருந்தால் மட்டுமே உண்மையான சுதந்திர தினமாகும் இதற்காக நாம் பிரார்த்தனை செய்ய் வேண்டும்’’ இவ்வாறு பேசினார். சுதந்திர தினவிழாவில் பொது மேலாளர் செல்வக்குமார், புரூமல் ஜார்ஜ் ஹேஸ்டிங் உள்பட பலர் மாஸ்க அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here