அறம் சொல்லும் ஆன்மிக அரசியலுக்காக.. அவதாரம் எடுக்கிறார் ஆண்டவன்..

0
155
nadunilai news

உலகில் நன்மையும் தீமையும் கலந்தே நடைபோடுகிறது. நன்மை அதிகப்படும்போது மக்கள் எல்லா வகையிலும் செளகரியம் பெறுகிறார்கள். அதே வேளை, தீமை அதிகப்படும்போது அல்லோலப்படுகிறார்கள். இதுதான் நன்மை என சொல்லவே துணிவில்லாமல் போகும் காலத்தில் அவதாரம் எடுக்கிறார் ஆண்டவன். தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் வரை கூடவே இருக்கிறார் அவர்.

56 தேசங்களை உள்ளடக்கிய அஸ்தினாபுரத்தில் அப்படியொரு நிலை வந்தபோது அவதரித்தார் கிருஷ்ணர். அவர் வழிகாட்டலின்படி அநீதி அழிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது.

அஸ்தினாபுரத்தில் நியாயப்படி கண் இல்லாதவர் அதாவது அறத்தை சொல்லும் ஆன்மிகம் இல்லாதவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வர கூடாது என்கிற சத்திரியதர்மத்தை மீறி ஆட்சி பொறுப்பிற்கு வந்தார் திருதுராஷ்டர் மன்னர். அதற்கு காந்தார தேசம் என்கிற அந்நிய தேசத்து இளவரசர் சகுனிதான் முழுவதுமாக உதவினார். அவர்களுக்குள் இருந்து வந்த உறவினை வைத்து அஸ்தினாபுரம் அரண்மனையிலேயே தங்கியிருந்தார் சகுனி.

சகுனியின் நோக்கம் முழுவதும் அஸ்தினாபுர சாம்ராஜ்யம் அழிக்கப்படவேண்டும். அதாவது தன் மூதாதைர் விருப்பபடி இந்த மண்ணில் அறம் கொண்ட ஆட்சியை முற்றிலுமாக அழிக்க வேண்டும். அதற்காக தனது சொல்பேச்சை கேட்கும் அளவிற்கு திருதுராஷ்டர் மன்னனின் மகன் துரியோதனனை மன்னன் ஆகும் ஆசையை காட்டி அவனையும் அவனது தம்பி துச்சாதனன் உள்ளிட்ட கெளரவர்களை தம்தேவைக்கு வழி நடத்தி வந்தான்.

பதவி வெறி பிடித்த திருதுராஷ்டர் சகுனியின் சொல்லுக்கு ஆடினார். தர்மத்தை காக்கும் தனது தம்பி பாண்டுவையும் அதற்கு பிறகு அவரது மகன்கள்,பாண்டுவின் மனைவி குந்தி,அவரது மருமகள் திரெளபதி உள்ளிட்டவர்களை வாழ்நாளில் பெரும்பகுதியை காடுகளை சுற்று வரும்படி செய்தான். இந்தமண்ணில் மக்கள் தேவையை ஓர்ளவு பூர்த்தி செய்து மக்களை தன் வசம் இழுத்து வைத்திருந்த துரியோதனன், அறம் சொல்லும் ஆன்மிகவான்களான பாண்டவர்களை மட்டும் ஆட்சி செய்யமுடியாமல் சதி செய்து தடுத்தே வந்தான்.

ஆன்மிகத்தில் நாட்டமில்லாத துரியோதனன், தேவர்களின் மகன்களான பாண்டவர்களை கண்டாலே கொன்றுபோட்டுவிடும் கோபம் கொண்டிருந்தான். அதற்கெல்லாம் ஆட்சி பொறுப்பு பறிபோய்விடுமோ என்கிற பயம். பாண்டவர்களின் திறமை மீதிருந்த பொறாமை. அவர்கள் மீது குரோதத்தை தனியவிடாமல் பார்த்துக் கொண்ட சகுனிதான் காரணம்.

நிறைந்த அஸ்தினாபுரம் சபையில் திரெளபதியின் துயிலுறியும் அநீதி நடந்தது. அதை சபையில் உள்ளோர் வேடிக்கை பார்த்தனர். வாக்கு மாறாத தர்மர் உள்ளிட்ட பாண்டவர்கள் கூட வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அதாவது ஆன்மிக சின்னங்கள் அவமதிக்கப்படும்போது வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆன்மிகத்தை வெறுக்கும் அநீதி ஆட்சி செய்ததால் அறத்தை கடைபிடிக்கும் ஆன்மிகம் அடங்கி போய் வேடிக்கை பார்த்தது.

அப்போது திரெளபதிக்கும் ஆடை கொடுத்து மானத்தை காப்பாற்றிய ஆண்டவன், இது நீதி அல்ல, அநீதி என்று விளக்கிப்பார்த்தான். ஆனாலும் துரியோதன், சகுனி வகையறா கேட்கவில்லை. அதன் பிறகு ஆண்டவன், ‘அநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட வேண்டும்’ என்று முடிவு செய்தான்.நீதியின் பக்கமான பாண்டவர் பக்கம் ஆண்டவன் நின்றான்.

ஆனால் அநீதிக்கும் நீதிக்கும் இடையே, அறம் கொண்ட கர்ணன் அநீதி பக்கம் நின்றான். இந்த கர்ணன் அறம் கொண்டவர்களான பாண்டவர்களின் சகோதரன்தான் என்றாலும் தான் இந்த அளவிற்கு உயர்வதற்கு துரியோதன் தான் காரணம் என சொல்லி ஆன்மிக அரசியலை ஏற்கவில்லை.

ஆன்மிகத்தை வெறுக்கும் துரியோதனிடமே தன்னை மேலானவனாக காட்டிக் கொள்வதும். இவர்கள்(துரியோதனன்,கர்ணன்) இரண்டு பேர்கள் மட்டுமே இங்கே இருக்க வேண்டும் என்றும் ஆன்மிகத்தை சொல்லும் பாண்டவர்கள் போன்றவர்களை உள்ளே நுழையவிட கூடாது எனவும் அரசியல் காய்நகர்த்தினான் சகுனி. கர்ணனின் திறமையை பயன்படுத்தி துரியோதனனை ஆட்சி க்கு கொண்டுவர சகுனி நினைக்கிறான்.

இதற்கிடையே தேவர் மைந்தர்களை பெற்ற குந்திதேவி, கர்ணனை தனிமையில் சந்தித்து ’நீயும் என்னுடைய மகன்தான் எனவே உங்களுக்குள் சண்டை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.கூட்டணி அமைத்துபார்த்தார்.அதாவது ஆன்மிக அரசியல்வாதிகளுக்குள் கூட்டணி ஏற்படவில்லை. ஆனாலும் தன்மீது இருக்கும் அபார நம்பிக்கையாலும் நண்பன் துரியோதனன் மட்டுமே தனக்கு நிகராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதை கர்ணன் சம்மதிக்கவில்லை. அர்ச்சுணன் தவிர மற்றவர்களை கொல்லக் கூடாது என்றும் அர்ச்சுணன் மீது கூட சக்தி வாய்ந்த தனுஷை ஒன்றுக்கு மேல் ஏவ கூடாது என்றும் கர்ணனிடம் சக்தியம் வாங்கிவிட்டார் குந்திதேவி.

பாண்டவர்களுக்கு எதிராக துரியோதனனின் கெளரவர்களோடு போர் களத்தில் நின்றாலும் கர்ணனால் தனது தம்பிகளை கொல்ல முடியவில்லை. தனதுதாய்க்கு செய்து கொண்ட சத்தியம் அவரை நிலத்தில் சாய்த்தது. அறமும் ஆன்மிகமும் கொண்ட கர்ணன், அநீதி நடைபோட்ட துரியோதனன் பக்கம் நின்றதால், தோற்றான்.

மிக பெரிய வல்லவனான கர்ணன் வீழ்த்தப்பட்ட பிறகு அறம் சார்ந்த ஆன்மிக அரசியலை வெறுக்கும் துரியோதனன் தண்ணீருக்குள் ஒழிந்து கொள்ள, அவருக்கு உதவிய சகுனியை சாஸ்திரம் கற்ற சகாதேவன், வெட்டி வீசினான். வல்லமை பொறுந்திய வாயுபுத்திரன் பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து ரத்தம் குடித்தான். அவமானப்படுத்தப்பட்ட திரெளபதியின் கூந்தலில் துச்சாதனனின் ரத்தம் தோய்க்கப்பட்டது.

அதன் பிறகு தண்ணீருக்குள் தியானத்தில் இருந்த துரியோதனனை வெளியே வர செய்து, பாண்டவர்கள் தொடையை பிளந்து கொன்றனர். அநீதியை ஆளவைப்பதற்ககா சகுனி போன்ற அந்நிய தேசத்தார் சதி செய்தால், அநீதி பக்கம் இருக்கும் பீஸ்மர், விதூரன் போன்ற வல்லவர்கள் விலகிக் கொண்டனர்.

கெளரவ சேனையை அதாவது அநீதியை அழித்த ஆண்டவன், தர்மமகராஜர் தலைமையில் பாண்டவர்களுக்கு ஆட்சி பொறுப்பை அமைத்து கொடுத்தார். இது எப்போதும் அவதரிக்கும் அவதாரம்தான் !

அதாவது நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடைபெறும் போரில் நிச்சயம் ஒருநாள் அநீதி அழிக்கப்படும். அதற்கு பகவான் உதவுவார். அநீதிக்கு உடந்தையாக இருப்போர் கூடவே அழிந்துபோவார்கள் என்பதே விதி.

-ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள் – 8056585872

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here