வீட்டுக்கழிவுகளில் உரம் தயாரித்து காய்கறிகள் விளைவித்தால் பரிசு – பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நகராட்சி அழைப்பு

0
21
WhatsApp Image 2019-06-29 at 1.01.54 PM

கோவில்பட்டி நகராட்சி சார்பாக கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வீட்டு கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து செயல்முறை பயிற்சி வழங்கும்; முகாம் நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக குப்பைகளை குறைக்கும் விதமாக பொது மக்கள் தங்கள் வீட்டு சமையல் அறையில் உருவாகும் மக்கும் தன்மையுள்ள காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயார் செய்து அவர்கள் வீடுகளிலேயே காய்கறி செடிகள் வளர்த்து மேற்கண்ட உரத்தை பயன்படுத்தும் பொருட்டு பரப்புரை செய்யப்பட்டு வரப்படுகிறது. அதன் படி இன்று கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சியின் சார்பாக வீடுகளில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் உணவு கழிவுகளில் இருந்து உரம் தயார் செய்து அவ்வுரத்தை பயன்படுத்தி காய்கறிகள் விளைவிப்பது தொடர்பான செயல்திட்டம் குறித்து கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பங்குபெறும் மாணவியர்கள், தங்களது வீடுகளில் உருவாகும் மக்கும் தன்மையுள்ள கழிவுகளில் இருந்து உரம் தயார் செய்து அதன் மூலம் ஏதேனும் ஒரு காய்கறி விளைவிக்க வேண்டும். அவ்வாறு சிறந்த முறையில் காய்கறி விளைவிக்கும் மாணவியர்களுக்கு பரிசும், நற்சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அச்சையா தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். சுகாதார அலுவலர்இளங்கோ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார்கள். துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ், திருப்பதி, சுரேஷ்குமார் திட்டம் குறித்து விளக்கமாக எடுத்து கூறினர். மேலும் நகராட்சி ஆணையாளர் அச்சையா கூறுகையில் இத்திட்டத்தினை நகர்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here