பள்ளக்குறிச்சி, கொம்பன்குளம் பகுதிகளில் சுதந்திர தின கொடியேற்றுவிழா

0
174
pallakurichi

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பள்ளக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 74வது சுதந்திரதின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ரா. சித்ராங்கதன் கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

துணை தலைவர் ரா. டார்வின் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு லட்டு வழங்கினார், ஒன்றிய கவுன்சிலர் மா. சுதாகர், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

அதேபோல் கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 74 வது சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு தலைமை தாங்கிய ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர் P.ஜேசுராஜன் பொன்னாடை போர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர் சா.ஆல்வின் வரவேற்றார்.

பள்ளி தூய்மை பணியாளர் சக்திக்கனி லிங்கபாண்டி முன்னிலை வகித்தார்கள்.ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.பின் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here