திருச்செந்தூரில் 25 கிலோ சரஸ் என்கிற போதை பொருள் பறிமுதல் – 2 பேர் கைது

0
116
sp news

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மாவட்டத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து, மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மேற்படி தீவிர நடவடிக்கையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 25 வழக்குகள் பதிவு செய்யபட்டு 32 பேர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 24 கிலோ 660 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சமீபத்தில் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1.25 டன் எடையுள்ள புகையிலைப்பொருட்கள், ஒரு இரு சக்கர வாகனம், 3 கார்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது உட்பட 2,34,678 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நேற்று விளாத்திக்குளம் காவல் நிலைய போலீசார் இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2800 பண்டல்;கள் 600 சிறிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதி, முதல் நிலை காவலர்கள் எழில் நிலவன், இசக்கியப்பன், சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில்,நாகர்கோவிலைச் சேர்ந்த இரு நபர்கள் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (15.08.2020) காலை வாகன சோதனை செய்து வந்தபோது திருச்செந்தூர் காவல் நிலைய சரகம் பரமன்குறிச்சி ரோடு ஆவுடையார்குளம் கரையில் இரு சக்கர வாகனம் TN 92 A 8186 பதிவெண் கொண்ட கருப்பு ஊதா நிற பல்சர் வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இருவர்களை விசாரணை செய்ததில், அவர்களிடம் காப்பி நிற கட்டிகளாக சுமார் 25 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியவர்கள் பின்பு ‘செரஸ்” என்ற போதைப் பொருள் என தெரிவித்தார்கள். மேலும் மணி மற்றும் மகேஸ்வரன் என்ற நபர்கள் புல்லட் வாகனத்தில் வந்து தங்களிடம் கொடு;த்து சென்றதாகவும் கூறினார்கள். ‘செரஸ்” குறித்து காவலர்கள் விசாரித்த போது அது பதப்படுத்தப்பட்ட கஞ்சா என்ற விபரம் தெரிய வந்துள்ளது.

செரஸ் உருவில் உள்ள கஞ்சா சமீபத்தில் கேரளாவில் பிடிக்கப்பட்ட போது 1 கிலோ எடை கொண்டது சந்தையில் சுமார் 30 லட்சம் மதிப்புடையது என பத்திரிக்கைகளில் செய்தி வெளி வந்ததையடுத்து 25 கிலோ பெறுமானது சர்வதேச மதிப்பில் கோடிக்கணக்கில் மதிப்புடையதாகும் என்பதால் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தனிப்படையினர் அந்த நபர்கள் குறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சேர்ந்த என்.ஜி.ஓ காலணியைச் சேர்ந்த கனகரத்தினம் மகன் செந்தில் குமார் (வயது 43) மற்றும் நாங்குநேரி, பெரும்பத்து பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் துரைராஜ் (வயது 44) என தெரியபவந்தது.

இவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை செய்த போது இவர்கள் மீது ஏற்கனவே பல கொலை, திருட்டு மற்றும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் ‘சரஸ்” (Charas) எங்கிருந்து வாங்கினார்கள்? யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? கடற்கரை மார்க்கமாக வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா? உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கஞ்சா தொடர்பாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் முத்துராமன் விசாரணை செய்து வருகிறார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட போதைப்பொருளை பிடித்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here