முழு ஊரடங்கு நாசரேத்தில் கடை அடைப்பு

0
212
nazaeth

நாசரேத், ஆக. 16

கொரோனா தடுப்பு முழு ஊரடங்கையொட்டி நாசரேத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.பெட்ரோல் பல்க் இயங்கவில்லை. ஆட்டோக்களும் ஓடாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆக. 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளன. இதில் கடந்த மாதம்போல் ஆகஸ்டு மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி நாசரேத் பஜார், சந்தி பஜார், உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் ஓடவில்லை. பெட்ரோல் பல்க்கும் இயங்கவில்லை.

இதனால் நாசரேத் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சில இடங்களில் நாசரேத் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here