வலைதளங்களில் அவதூறு – நாசரேத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாடடம்

0
69
nazareth

நாசரேத், ஆக. 19

வலைதளங்களில் கட்சி மற்றும் தலைவர் நல்லக்கண்ணு குறித்த அவதூறு பரப்பியவர்களை கைது செய்யகோரி நாசரேத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் தலைவர் நல்லக்கண்ணு பற்றியும் வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட குற்றவாளிகளை கைது செய்ய தமிழக காவல்துறை தாமதம் செய்வதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாசரேத் நகர கிளை சார்பாக நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் கட்டுமான சங்க செயலாளர் ஜெயபாண்டியன், ஆட்டோ சங்கத்தலைவர் ஞானசேகர்இஸ்ரவேல், உதவி செயலாளர் சுந்தரம், மற்றும் கட்சி நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பட்டுதனசிங், உள்பட கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here