வடலிவிளை ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா

0
153
vadalivilai

சாத்தான்குளம், ஆக. 19:

வடலிவிளை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள வடலிவிளை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு ராஜலிங்கம் தலைமை வகித்தார். இந்து அன்னையர் முன்னணி கிளை தலைவி பத்மா, துணைத்தலைவி சந்திரா, பொதுச்செயலர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேகம், உள்ளிட்ட அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சு. மாயக்கூத்தன், மாநில பொதுச்செயலர் டாக்டர் த. அரசுராஜா ஆகியோர் பேசினர்.

விழாவில் ஆன்மிக சிந்தனை ஊட்டும் விதமாக ராமாயணம், மகாபாரதம் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அன்னையர் முன்னணி பொறுப்பாளர் விஜயன், உடன்குடி இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here