இ-பாஸ் நடைமுறையை முற்றிலுமாக தமிழக அரசு கைவிட வேண்டும் – தூத்துக்குடி ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை

0
162
epass

இ-பாஸ் நடைமுறையை முற்றிலுமாக தமிழக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஓட்டுனர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

இ-பாஸ் நடைமுறையை முற்றிலுமாக தமிழக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு மற்றும் இ-பாஸ் நடைமுறை காரணமாக, கடந்த 6 மாதமாக போக்குவரத்து தொழில் முடங்கியுள்ளது. ஓட்டுநர்கள் தங்களின் வாழ் வாதாரத்தை இழந்துள்ளனர்.

வருவாய் இல்லாததால் இதுவரை 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். எனவே இ.பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த டிரைவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 3 மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுநர்களின் உரிமமான பேட்ஜ் புதுப்பிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.எப்.சி., புதுப்பிக்க எளிய நடைமுறையை கையாள வேண்டும்.

6 மாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். வாகன கடனுக்கான வட்டியை ஆறு மாதம் ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து பேரிடர் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here