சாத்தான்குளத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள்

0
39
rajiv news

சாத்தான்குளம், ஆக. 20:

சாத்தான்குளம், நாசரேத்தில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 76 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் கிழக்கு வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ. லூர்துமணி தலைமை வகித்தார்.தெற்கு மாவட்ட துணைத் தலைவர் து. சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் பிச்சிவிளை வி.எம். சுதாகர், ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்கீஸ், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபுசிங்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதையடுத்து சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நகர துணைத் தலைவர் ஜோசப்அலெக்ஸ், சாத்தான்குளம் நகர வர்த்தக பிரிவு தலைவர்கதிர்வேல், வட்டார பொருளாளர் சக்திவேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here