தூத்துக்குடி மாவட்டத்தில் ‘பிரிகேட்” இரு சக்கர வாகன ரோந்து தனிப்படையை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

0
41
sp news

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘பிரிகேட்” (Brigade) என்று பெயர் சூட்டப்பட்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய 16 இரு சக்கர வாகனங்கள் தனிப்படை ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இன்று (21.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் ‘பிரிகேட்” என அழைக்கப்படும் இரு சக்கர வாகன ரோந்து தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசால் வழங்கப்பட்ட 16 புதிய இரு சக்கர புதிய வாகனங்கள் ஒதுக்கப்பட்டு, அதில் அவசர ஒலிப்பான் (Siron), ஒளிரும் விளக்குகள் (Flashing light), சிறிய ஒலி பெருக்கி ( Public Address System) ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை துவக்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ’’ஒரு விபத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்யக்கூடிய அளவில், அதற்கான மருந்துப் பொருட்கள் தயார் நிலைய இருக்கும். மொத்தத்தில் நான்கு சக்கர வாகனத்தில் உள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த 16 வாகனங்களில் தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு 5 இரு சக்கர வாகனங்களும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனங்களும், திருச்செந்தூருக்கு 2 இரு சக்கர வாகனங்களும், ஸ்ரீவைகுண்டத்திற்கு 2 இரு சக்கர வாகனங்களும், மணியாச்சிக்கு 1ம், கோவில்பட்டிக்கு 2ம், விளாத்திக்குளத்திற்கு 1ம் மற்றும் சாத்தான்குளத்திற்கு 1ம் என இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த ‘பிரிகேட்” விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் அந்த, அந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் உத்தரவுப்படி அவர்கள் பணியாற்ற வேண்டிய இடங்கள் ஒதுக்கப்படும். இவர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளார்கள் என்பதை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை கண்காணித்து கொண்டிருக்கும். பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் அருகிலிருக்கும் இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டு, அவர்கள் சென்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இந்த பிரிகேட் தனிப்படையினர் பொதுமக்களுக்கு நல்ல நண்பனாகவும், அவர்களின் அவசர உதவிக்கு விரைந்து சேவைபுரிய வேண்டும் என்றும், தனிப்படையினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும்’’ என வாழ்த்தினார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி ஆயுதப்படை ஆய்வாளர் ஜாகீர்உசேன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் ராஜா மற்றும் ஆயுதப்படை காவலர்கள் செய்திருந்தனர். இந்த துவக்க விழாவில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் செல்வன் மற்றும் கோபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here