வேப்பலோடை கண்மாயில் பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் !

0
31
veppalodai news

வேப்பலோடை மற்றும் சுற்றுவட்டார மானாவாரிவிவசாயிகள் சங்கம் சார்பாக வேப்பலோடை கிராமத்தில் ஆர்பாட்டம் நடை பெற்றது.

ஆர்பாட்டத்திற்கு விவசாயசங்க தலைவர் ரூஸ்வெல்டு தலைமை தாங்கினார். சங்கசெயலாளர்பாண்டிநாடார் செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் வேப்பலோடை மற்றும் அதை சுற்றிஉள்ள பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு நஷ்டத்துக்குள்ளான பயிருக்கு உரியநிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விவசாய நிலங்களுக்குசெல்வதற்கு கண்மாயில் பாலம் அமைத்து தர வேண்டும்

என்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்திற்க்குவேப்பலோடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாய மக்கள் குடும்பமாக கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here