தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்குபூஜை !

0
32
kovil

தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் இந்துநாடார் உறவினர் முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சித்திரைவிஜயன், பொருளாளர் முருகேசன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் காசிலிங்கம், புதுராஜா, ஈஸ்வரன், பால்ராஜ், பாபுஜி, மணி, தேன்ராஜ், பொன்துரை, கதிரேஷ், லிங்கராஜ், மாரியப்பன், வாசு, சுந்தரகுமார், மாரிமுத்து, கார்த்தீசன், ஆகியோர் செய்திருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here