தூத்துக்குடி மாவட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு அதிமுக நிர்வாகிகள் நியமனம்! அடிமட்டத் தொண்டர்கள் புலம்பல்!!

0
312
admk news

தூத்துக்குடி,ஆக.22: தூத்துக்குடி மாவட்டத் தில் பணம் பெற்றுக் கொண்டு அதிமுக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அடிமட்டத் தொண்டர்கள் புலம்புகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அதிமுக புதிய நிர்வாகிகளை தலைமைக்கழகம் நிய மனம் செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நாசரேத் பேருராட்சி கழக அம்மா பேரவை செயலாளர், இளைஞர் அணி செயலாளர், மாணவர் அணி செயலாளர், பேருராட்சி கழக துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை திமுகவில் இருந்து சமீபத்தில் அதிமுகவிற்கு வந்தவர்களை கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.

கட்சியில் உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் என பல நபர்கள் கட்சியில் பல பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் ஆத்தூர் பேருராட்சி கழக செயலாளர் மாற்றம் செய்யபட்டு திமுக வில் இருந்து விலகி கடந்த முன்று மாதத்திற்கு முன்பு வந்தவர் பேருராட்சி கழக செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யப் பட்டுள்ளார் மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திமுகவில் இருந்து வந்தவர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் அதே போல் உடன்குடி ஓன்றிய செயலாளர், ஸ்ரீ வைகுண்டம் ஓன்றிய செயலாளர் ஆகியோர் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அஇஅதிமுக அடிமட்டத் தொண்டர்கள் பலர் மாவட்ட செயலாளர் மீது அதிருப்தி அடைந்துள் ளனர். மேலும் ஒருசில பதவிகள் பணம் பெற்றுக் கொண்டு கொடுக்கப்பட் டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதுகுறித்து தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here