கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் பறிமுதல் – தாலுகா அலுவலகம் முன்பு நள்ளிரவில் பூஜை செய்த இந்து முன்னணி அமைப்பினர்

0
167
kvp vinayagar

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வீடுகளில் வைத்து வழிபாடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து ஒரு லாரியில் ஒரு அடி முதல் 3 அடி வரை உள்ள ஒன்பது விநாயகர் சிலைகளை கொண்டு வந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விநாயகர் சிலைகளை கொண்டு வந்த லாரியை மறித்து 9 சிலைகளை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிலைகள் கொண்டுவர பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்து முன்னணி அமைப்பினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். ஆனால் அதிகாரிகள் தர மறுத்ததால், சிலைகளை தர வலியுறுத்தி தாலூகா அலுவலக வாயில் முன்பு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here