தூத்துக்குடி மாநராட்சி பகுதியில் வரும் காலங்களில் நூறு சதவீதம் மழை நீர் தேங்காதவாறு 74 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது குறித்து ஆய்வு கூட்டம் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் நடைபெற்றது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்டத்தில் 403 ஊராட்சிகள், அனைத்து 19பேரூரட்சிகளிலும் நகரட்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிகை எடுக்கபட்டதான் காரணமாக எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படாமல் பாதுக்காக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அளவு 549 mm மழை பெய்துள்ளது. ஆண்டு சராசரி 660 மி மீ என்பதை தாண்டி மாவட்டம் 699.53 மிமீ மழையை பெற்றுள்ளோம். குடிமராமத்து காரணமாக ஏரிகளும் பாதுகாக்கபட்டுள்ளது. தமிழகத்தில் அதிக மழை நமது மாவட்டத்திற்கு பெற்றுள்ளது. போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் உயிர்சேதம், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 53 விடுகள் பாதிப்பு, 4 கால்நடைகள் உயிரிழந்தன என்றார். வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை நிவாரண தொகை வழங்கப்படும். ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கும் மழை நீரை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. சாலைகளை சரிசெய்து போக்குவரத்து சீராக நடவடிக்கை எடுக்கபட்டுள்ளன. மாநகரட்சிக்குள் 13 இடங்களில் உள்ள மருத்துவமனைகள் மூலம் சிறப்பு முகாம் ஏற்படுத்தி தொற்று நோய்கள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளன.
மாவட்டத்தில் 90 சதவீதம் கண்மாய்கள் நிரம்பியுள்ளன. அவைகளை எதிர்கால தேவைக்கு பயன்படுத்தும் வகையில் பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.