ரவுடி துரைமுத்து சாவுக்கு வருத்தம் தெரிவித்த நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

0
577
crime

கொலை வழக்கில் தொடர்புடைய துரைமுத்து என்பவரை தேடிவந்த தனிப்படை போலீஸ், கடந்த 18-ம் தேதி வல்லநாடு அருகே காட்டுக்குள் பதுங்கியிருந்த நிலையில் சுற்றி வளைத்தது. தன்னை போலீஸ் சுற்றி வளைத்துவிட்டதை கண்ட துரைமுத்து தப்பிக்க முயன்றார். முடியவில்லை என்றதும் அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸ் நோக்கி வீசி எறிந்தார். அதில் ஒன்று கீழே விழ, இன்னொன்று காவலர் சுப்பிரமணியம் மீது விழுந்து அவரை சம்பவ இடத்திலேயே கொன்றது.

அத்துடன் குண்டுகளை எறிந்தபோது கைகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் துரைமுத்துவும் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து துரைமுத்துவின் சகோதரர்கள் முவரை கைது செய்தனர். மேலும் விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் காவலர் சுப்பிரமணியம் உடல் அரசு மறியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவுடி துரைமுத்துவின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக் கொண்ட உறவினர், நண்பர்கள் ஊர்வலமாக சென்று அடக்கம் செய்தனர். அப்போது பெரிய அளவிலான அருவாள் ஒன்றையும் துரைமுத்துவின் உடலுடன் சேர்த்து புதைத்தனர். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில் துரைமுத்துவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வெள்ளப்பாண்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்ய, அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துவிட்டார் நெல்லை ஆயுதப்படை காவலரான சுடலைமுத்து என்பவர். இந்த தகவல் காவல்த்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சக காவலரை கொன்ற ரவுடியின் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு இன்னொரு காவலரின் மன ஓட்டம் செல்வதை பார்த்து அனைவரும் ஆச்சர்யபட்டனர். இந்தநிலையில் காவலர் சுடலைமுத்துவை சஸ்பெண்ட் செய்து அதிரடியான உத்தரவை பிறப்பித்தார் நெல்லை மாநகர ஆணையர் தீபக் டாமோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here