கருத்து கேட்பு நடவடிக்கையெல்லாம் சும்மா கண்துடைப்பு – தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி

0
70
kanimozhi

தூத்துக்குடி விமானநிலையத்தில் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசினார்.

’’தி.மு.க சார்பில் ஒரு குழுவையே அமைத்து தேசிய கல்விக் கொள்கையில் இருக்க கூடிய கருத்துவேறுபாடுகளை அலசி ஆராய்ந்திருக்கிறோம். அதில் திமுகவின் நிலைபாட்டினை ஒரு புத்தக வடிவில் தயார் செய்து எம்பிக்கள் மூலம் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறோம்.

நாங்கள் மட்டுமல்ல பலரும் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் அதெயெல்லாம் இவர்கள் எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்த கல்விக் கொள்கையை நாங்கள் சமூக நீதிக்கு எதிரானதாகவே பார்க்கிறோம். மொழியை திணிப்பது, மாநில நலனுக்கு எதிராக செயல்படுவது இவர்களின் வேலையாக இருந்து வருகிறது.

இவர்கள் கருத்து கேட்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததைத்தான் செய்வார்கள். நீட்தேர்வில் நடந்ததை பார்க்கவில்லையா? நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைபாடு. குறைந்தபட்சம்கொரோனா நேரத்தில் ஒரு வருடத்திற்காவது விலக்களிக்க வேண்டும். அதன்பிறகு நிரந்தரமாக விலக்களிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

கொரோனா நடவடிக்கைகளை இந்த அரசு தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது. எதிர்கட்சிகளின் யோசனையை கேட்பதே இல்லை. பல மாநிலங்கள் எதிர்கட்சிகளின் யோசனையை கேட்டு செயல்படுகிறது. ஆனால் அதிமுக அரசு அப்படி அல்ல. அதுபோல் எந்த நிகழ்ச்சிகளிலும் எதிர்கட்சியான எங்களை அழைப்பதில்லை. கொரோனா வருவதற்கு முன்பும் அப்படித்தான் செய்தார்கள். இப்பவும் அப்படித்தான் செய்கிறார்கள்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here