தென்திருப்பேரையில் பக்தர்கள், பயணிகள், பொது மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் – அகற்ற கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

0
159
bjp news

ஆன்மீக பகுதியான தென்திருப்பேரை மெயின் ரோட்டில் பக்தர்கள், பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற கோரி பாஜக சார்பில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி தலைவி தேன்மொழி, துணை தலைவி முத்துலட்சுமி, மாவட்ட வணிக பிரிவு செயலாளர்கள் பழனிவேல், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கோஷங்கள் எழுப்பபட்டது. இதில், மாநில மகளிர் அணி செயலாளர் நெல்லையம்மாள், மாநில வர்த்தக அணி செயலாளர் சத்தியசீலன், மாவட்ட பொது செயலாளர் சரஸ்வதி, விவசாய அணி மகாதேவன், ஒன்றிய பொது செயலாளர் குமரேசன், ஒன்றிய மாவட்ட வணிக பிரிவு செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here