ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரி பணியாற்றுவதா? – திருச்செந்தூர் எம்.எல்.ஏ முன்னிலையில் விவசாயிகள் வாக்குவாதம்

0
190
thiruchendur

திருச்செந்தூர், ஆக. 27

திருச்செந்தூரில் நடந்த அதிகாரிகள் சமாதான கூட்டத்தில் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னிலையில் விவசாயிகள் காரசார வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக தொடர்ந்துபணியாற்றும் பொதுப்பணித்துறை அதிகாரியை மாற்றாதது ஏன் என கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில் அதிகாரிகள் காலில் விழுந்து கும்பிடுவதாக வேதனை தெரிவித்தனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பிராதன தொழிலாக உள்ளது. இந்த விவசாயத்திற்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணை தண்ணீரை நம்பி தான் பெரும்பாலும் விவசாயம் நடக்கிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயம் தண்ணீர் இல்லாம் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பாபநாசம் அணையில் 98 அடி தண்ணீர் இருந்தும் பாசன குளங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றி விட்டது. இதனால் வாழைகள் குழைத்து விளைச்சல் காணும் சூழ்நிலையில் கருகும் அபாயம் உள்ளது. இதனால் பாபநாசத்திலிருந்து தண்ணீரை எதிர்ப்பார்த்து தென்கால் மற்றும் வடகால் பாசன விவசாயிகள் உள்ளனர். இதனால் பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் முக்காணி ரவுண்டானாவில் உண்ணாவிரதம் போராட்டம் நேற்று நடப்பதாக இருந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் சமாதான கூட்டம் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. ஆர்.டி.ஒ., தனப்பிரியா தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட வடிநில செயற்பொறியாளர் அண்ணாத்துரை, பிரிவு அலுவலர் ரகுநாதன், டி.எஸ்.பி.பாரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் துவங்கியதுமே விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். அப்போது பேசிய விவசாயிகள், பாபநாசம் அணையில் 16 அடி தண்ணீர் இருந்த போது, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டபட்டது. தற்போது 98 அடி தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். இதற்கு அதிகாரிகளின் அரசியல் காரணங்களும், ஜாதி பிரச்சனையை அதிகாரிகளே தூண்டுவதாக குற்றம்சாட்டினர். மேலும் பேசிய விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி வடிநில கோட்ட்த்தில பணிபுரியும் பிரிவு அலுவலர் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

அவருக்கு எல்லா பிரச்சனைகளும் தெரியும். இருந்தும் விவசாயிகளிடம் பாரபட்சம் காட்டுகிறார். அவரை 20 ஆண்டுகளாக மாற்றாமல் ஒரே இடத்தில் பணிபுரிவது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும் அதிகபட்ச ஆத்திரத்தில் விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் காலை தொட்டு வணங்குவதாக வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து இக்கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. இறுதியில் தற்போது பாபநாசம் அணையில் 1400 கனடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், வரும் 31ம் தேதி பிறகு தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக இக்கூட்டம் துவங்கியதும் காரசார வாக்குவாம் நடந்தது. டி.எஸ்.பி. பாரத் பாதியில் கூட்டத்திற்கு வந்தார். அப்போது கூட்ட அரங்கில் இருந்த பத்திரிக்கையாளர்களை ஆர.டி.ஒ., தனப்பிரியா வெளியே செல்லமாறு கூறினார். இதனால் பாதியிலேயே செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here