தமிழகத்தில் ஒரேநளில் 94 பேர் கொரோனாவால் உயிரிழப்பு- சென்னையில் மட்டும் 16 பேர் மரணம்!

0
30
corona

சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 94 பேர் கொரோனா, கொரோனாவால் ஏற்பட்ட பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை அரியலூர் 0 (31) செங்கல்பட்டு 8 (419) சென்னை- 16 (2729) கோவை- 5 (294) கடலூர்-5 (121) தருமபுரி- 0 (13) திண்டுக்கல் – 2 (125) ஈரோடு – 1 (40) கள்ளக்குறிச்சி- 4 (72) காஞ்சிபுரம் – 5 (241) கன்னியாகுமரி – 3 (173) கரூர்- 0 (25) கிருஷ்ணகிரி- 1 (30) மதுரை- 3 (357) நாகப்பட்டினம் – 3 (40) நாமக்கல் – 1 (37) நீலகிரி – 0 (10) பெரம்பலூர்- 0 (17) புதுக்கோட்டை- 3 (93) ராமநாதபுரம்- 1 (104) ராணிப்பேட்டை- 1 (118) சேலம் – 9 (143) சிவகங்கை – 1 (107) தென்காசி – 0 (102) தஞ்சாவூர்- 3 (114) தேனி- 0 (141) திருப்பத்தூர்- 3 (61) திருவள்ளூர்- 4 (396) திருவண்ணாமலை- 1 (157) திருவாரூர் – 0 (42) தூத்துக்குடி- 0 (111) நெல்லை- 2 (172) திருப்பூர்- 1 (65) திருச்சி – 4 (119) வேலூர்- 3 (157) விழுப்புரம்- 0 (65) விருதுநகர்- 1 (188)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here