காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.86,50,000 நிதிவுதவி – தென் மண்டல ஐ.ஜி முருகன் வழங்கினார்

0
114
ig news

வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியன் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி எஸ். முருகன், நேரில் சென்று தென் மண்டல காவலதுறை சார்பாக ரூபாய் 86,50,000/- நிதியுதவி வழங்கினார்.

கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் வீர மரணமடைந்தார்.

அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க மதுரை தென் மண்டல ஐ.ஜி முருகன், அவர்களின் அறிவுறுத்தலின்படி, தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நிதியுதவி பங்களிப்பு செய்துள்ளனர்.

அந்த பங்களிப்பு ரூபாய் 86,50,000/-த்தை இன்று (31.08.2020) மதுரை தென் மண்டல ஐ.ஜி எஸ். முருகன் அவர்கள் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டார விளையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி திரு. பிரவீன்குமார் அபிநபு அவர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here