திமுக சொல்றதைத்தான் அதிமுக செய்கிறதாம் – உதயநிதி செய்யும் டிவிட் விளம்பரம்

0
64
udayanithi

தமிழக சட்டமன்றத்திற்கு வர இருக்கிற தேர்தல் வேலையில் ஒவ்வொரு கட்சியினரும் ஈடுபட்டு வருவதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது. ஒரே முகமாக அரசியல் செய்ய வேண்டிய காலத்தில் கொரோனா குறுக்கிட்டதால் அதற்கு மத்தியில் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டத்து ஒவ்வொரு கட்சிக்கும்.

கொரோனா பரவல், ஊரடங்கு அமல், அத்தனையும் முடக்கம் என தவிர்க்க முடியாத பொறுப்புகளுக்கு ஆளானது ஆளும் மத்திய மாநில அரசுகள். அதையும் தாண்டி எப்படி தேர்தல் வேலையை பார்க்காலாம் என ஆளும் மத்திய மாநில அரசுகள் யோசித்து பணியாற்றி வருகிறது.

இடையில் ஏழை,எளியோர் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு ஐயாயிரம் கொடுங்க, கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு ஒரு கோடி கொடுங்க என செய்ய முடியாத வேலையை எல்லாம் செய்ய சொல்லி நிர்பந்தம் செய்தது திமுகவும் அதன் தோழமை கட்சியான காங்கிரஸும். கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை அப்படித்தான் அரசியல் செய்து வருகிறது தி.மு.க மற்றும் காங்கிரஸ்.

தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கை செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. இ-பாஸ் ரத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, போக்குவரத்து தொடக்கம் என பல பணிகளை மேற்கொண்டு வருகிறது அதிமுக அரசு.

இந்தநிலையில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் இதுபோன்ற தளர்வுகள் எல்லாவற்றிற்கும் திமுகவே காரணம் என்பதுபோலவும் திமுக சொல்வதைத்தான் அதிமுக அரசு செய்து வருகிறது என்கிற அர்த்தத்தில் அதை பதிவு செய்திருக்கிறார்.

இதை திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதரிப்பதும், அதிமுக உள்ளிட்ட ஆளும் தரப்பு இதுதான் நடக்கும் என தெரிந்து கொண்டு அதை முன் கூட்டியே சொல்லுகிறார்கள். அதாவது காக்கா உட்கார பணம்பழம் விழுந்த கதைதான் என்று விமர்சித்து வருகிறார்கள். உதய நிதியின் டிவிட் இப்போது மலிவான விளம்பரம் போல் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here