ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

0
42
sterlite news

தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதன்படி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆலை மூடியிருக்கிறது. உரிய விதிமுறைப்படி ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி கேட்டு ஆலை நிர்வாகம் தமிழக அரசு, உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் வரை முறையிட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை குறித்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவை உடனே தடை செய்ய மறுத்து,இந்த மேல்முறையிட்டு மனுவிற்கு தமிழக அரசும் எதிர்மனுதாரர்களும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அதுவரை இதுகுறித்த விசாரணையை ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here