கோவில்பட்டியில் காற்றுக்கு வேரோடு சரிந்து விழுந்த 300 ஆண்டுகள் பழமை ஆலமரம் – மௌன அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

0
34
kvp news

கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் நேற்று மாலையில் வீசிய பலத்த காற்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் மர கிளைகள் முறிந்து விழுந்து சில வீடுகள் சேதமும் அடைந்தன.அதிலும் அக்கிராமத்தின் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே இருந்த சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்து சரிந்து விழுந்தது.

சுமார் 300 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு நிழல் தந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 3 தலைமுறைகளுக்கு மேலாக தங்களுடன் பயணித்து வந்த மரம் வேரோடு சரிந்து போனதை தாங்கி கொள்ள முடியாத முதியவர்கள் சிலர் மரத்தினை பாகங்களை தொட்டு பார்த்து தங்கள் உணர்வுகளை கண்ணீர் துளிகளாக வெளிப்படுத்தினர். மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் மரத்திற்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here