தச்சமொழி, பேய்க்குளம் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

0
45
sathai

சாத்தான்குளம், செப். 2:

தச்சமொழி, பேய்க்குளம் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை , தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து ஊஞ்சள் உற்சவத்தில் எழுந்தருளினார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை அருள்தரும் ஸ்ரீகோமதி அம்மாள் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூஜையையொட்டி சுவாமி , அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார். இதையடுத்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here