ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், பயிர்களுக்கான மானியம்

0
165
azvarthirunagari news

நாசரேத்,செப்.03:ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் கீழ் தாமிரபரணி உபவடி நீர் பகுதியில் காய்கறி விதைகளுக்கும் மற்றும் காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, ஆழ்வார்திருநகரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சி.சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாயிகள் நவீன மயமாக்கல் திட்டம் 2020-21ன் கீழ், ஆழ்வை வட்டாரத்திற்குட்பட்ட கீழ்-தாமிரபாணி உபவடி நீர் பாசனப்பகுதிகளில் வரும் ஆயகட்டு பரப்பில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வெண்டை, கத்தரி, தர்ப்பூசணி, முருங்கை போன்ற காய்கறி விதைகள் மற்றும் திசு வாழைக்கன்றுகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தென்திருப்பேரை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, பட்டா, அடங்கல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் அணுகி தங்களது பெயர்களை முன்பதிவு செய்திடவேண்டும்.

மேலும், ஆழ்வை வட்டாரத்திற்குட்பட்ட இப்பகுதிகளில் காய்கறி பயிர் செய்து வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்திடும் பொருட்டு அந்த விவசாயிளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்திலும் பயன்பெற விரும்புவோர் மேற்கூறியுள்ள ஆவணங்களோடு விதைகள் வாங்கியதற்கான விலைப்பட்டியலினையும் இணைத்து மேற்கண்ட அலுவலகத்தில் சமர்பித்திடல் வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 97869 64030, 86103 94768, 96006 19011 மற்றும் 70948 74730 என்ற எண்களில் தொடர்புகொண்டும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here