தென்மண்டல அளவில் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

0
44
vWhatsApp Image 2019-07-01 at 4.36.59 PM

தூத்துக்குடி மாவட்டத்தின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் தேங்கியது.

தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய 5 ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், அதன் பிறகு போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி அனைத்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. 
புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. ஆனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26 ம் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
இதன் காரணமாக திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. இதன்படி, இன்று காலை 6 மணி முதல் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று  கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி புறவழிச்சாலையில் சிப்காட் வளாகத்தில் பாரத் பெட்ரொலியம் நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் சிலிண்டர் பில்லிங் ஸ்டேசன் உள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட ஆறு தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கும் கேஸ் நிரப்பட்ட சிலிண்டர்கள் இங்கிருந்துதான் செல்கிறது. தினந்தோறும் 60 முதல் 70 லாரிகள் வரை சிலிண்டர்கள் ஏற்றிசெல்லப்படுகிறது. இன்று முதல் டேங்கர்லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியதால் ஏற்கனவே லோடு இருக்கும் லாரிகள் லோடு இறக்கும். புதிதாக லோடு ஏற்ற கேரள மாநிலம் கொச்சின் செல்லும் லாரிகள் இன்று முதல் செல்லாது என்கின்றனர் லாரி ஓட்டுநர்கள். வேலைநிறுத்தத்தால் லோடு இறக்கிய லாரிகளை பார்க் செய்ய வழியின்றி வந்த இடத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் டேங்கர்லாரிகள் வேலைநிறுத்தத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் பாரத் பெட்ரோலியத்தின் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள். குறிப்பாக இன்னும் 15 நாளுக்கு தேவையான சிலிண்டர்கள் இருப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here