மறைந்த மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை கடந்து வந்த பாதை

0
120
nazareth durai

நாசரேத், செப்.05: நாசரேத்தின் வளர்ச்சிக்கும்,திராவிட இயக்க வழித் தோன்றல்கள் ஆன திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மலர்ச்சிக்கும் அயராது அரை நூற்றாண்டு காலம் உழைத்தவர்.

மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் “சிறு” பொ.துரைராஜ் என்ற நாசரேத்து துரை, 4-9-2020 அன்று மாலை 4:00 மணி அளவில் நித்திரை அடைந்தார்.

நாசரேத்து துரை, 13-6-1938இல் நாசரேத்தில் பிறந்தார். தந்தையார், நாசரேத்து,சிறுதொண்டார் குடும்பத்தைச் சார்ந்த “சிறு” யோ.கோ.பொன்னுசாமி நாடார்.. தாயார், தங்கமணி அம்மாள்.. (சாத்தான்குளம் வட்டம், முதலூர் சுப்பிரமணியபுரம்) உடன் பிறந்தோர், சந்திரா டப்ஸ், மங்களம் தேவாசீர்வாதம், ரோஸ் பொன்னுசாமி, “சிறு”பொ.சாம்ராஜ், துணைவியார், ஹெலினா துரைராஜ் (நாகர்கோவில்) மக்கள், அஜந்தா பாஸ்கர், சித்தன்னா ஜார்ஜ், நாலந்தா பிரபாகர். தனது உடன்பிறந்தோரும்,மக்களும் நாசரேத்திலேயே திருமணம் முடிக்க இயற்கையும் வழி அமைத்து தந்தது..

1-3வது வகுப்பு
கஸ்பா பாடசாலை,நாசரேத்து.
4&5வது வகுப்பு
டாக்டர் மதுரம் நடுநிலைப் பள்ளி, நாசரேத்து..
6-11வது வகுப்பு,
நாசரேத்து மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி
மதுரை தமிழ்நாடு தொழில் நுட்பம் பயிலகத்தில் ஜெனரல் மிஷினிஸ்ட் படிப்பு..
1960-1962,
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணி..
1963-1979,
நாசரேத்து திருச்செந்தூர் கூட்டுஉறவு நூற்புஆலைப் பணி
1965,
தி.மு.௧. உறுப்பினர்..
1972-1978,
நாசரேத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்
1972-2003,
நெல்லை திருமண்டல
செயற்குழு உறுப்பினர்
2003-2013,
தூத்துக்குடி நாசரேத்து
திருமண்டல செயற்குழு உறுப்பினர்
1972-2018,
நாசரேத்து சேகர திருமண்டல
பெருமன்ற உறுப்பினர்
1972-1980,
நாசரேத்து நகர கூட்டுறவு
வங்கி தலைவர்..
வங்கிக் கட்டடத்தை புதுப்பித்து,
வங்கிச் செயலர் பிலிப் ஜெயசிங் துணையுடன்,தமிழகத்திலேயே முதன் முதலில் கூட்டுறவு வங்கிக்கு கிளை கண்டவர்.(ஆழ்வார்திருநகரி கிளை)

1980-1982,
நியூயார்க்,ஜெடா மிஷின் ஷாப் பணி
தாமிரபரணி மருதூர் மேலக்கால் தென்கரைக் குளம் பாசன விவசாயிகள் சங்கத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் சிறப்புடன் பணி ஆற்றி, 40 ஆண்டுகளுக்கு மேல் தலைவராக இருந்து வருகின்றவர்..
1987-1993,
ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.௧ செயலாளர்
நாசரேத்து வேளாண்மை தொடக்கக்
கூட்டுறவு வங்கியை உருவாக்கிய பிதாமகன்..
1986-1990,
நாசரேத்து பேரூராட்சி மன்ற தலைவர்
சிதம்பரனார் மாவட்டத்தில் சிறந்த தலைவர் என தேர்வு செய்யப் பட்டு,நடுவண் அரசால் பாராட்டப்பட்டவர்.
நாசரேத்து பேருந்து நிலையத்தை புதுப்பித்து,புதிய வணிக
வளாகமும் கண்டு,
நாசரேத்து வெஸ்ட்ர்ன் கிளப் வேண்டுகோளை ஏற்று,
காமராசர் பேருந்து நிலையம் எனப் பெயர் சூட்டியவர்.
பேரூராட்சி மன்றத்திற்கு புதிய
சொந்த அலுவலகக் கட்டடம் கண்டவர்..
புதியச் சாலைகளாக,
வாழையடி-2வது கைலாசபுரம் தெரு இணைப்புச் சாலை,
நாசரேத்து சந்தை-வகுத்தான்குப்பம் 7வது தெரு இணைப்புச் சாலை,
ஒய்.எம்.சி.ஏ. திருமறைஊர்
இணைப்புச் சாலை ஆகியன அமைத்தவர்.
தாயகம் திரும்பிய இலங்கை வாழ் மக்களுக்கு அரசு அளித்த குடிஇருப்புப் பகுதிக்கு திருவள்ளுவர் காலனி என்
பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.
1989,
சாத்தான்குளம் சட்ட மன்ற தொகுதி
தி.மு.க. வேட்பாளர்
1990-2015,
நாசரேத்து அருள் இஞ்சினியரிங் ஒர்க்ஸ்
பங்குதாரர்..
1994-2000,
ஆழ்வார்திருநகரி ஒன்றிய
ம.தி.மு.க. செயலாளர் மற்றும்
மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்
1996-2004,
நாசரேத்து நவீன அரிசி ஆலை
பங்குதாரர்..
2000 முதல் ம.தி.மு.௧ மாநில
துணைப் பொதுச் செயலாளர்
2001,
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி
ம.தி.மு.௧ வேட்பாளர்
2002-2008,
நாசரேத்து அபூர்வா நிதி நிறுவன
பங்குதாரர்..
2006,
சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி
ம.தி.மு.௧ வேட்பாளர்..
2008-2018
நாசரேத்து அதிசயா நிதி நிறுவன
பங்குதாரர்.
2009 முதல்
நாசரேத்து ரியல் எஸ்டேட்
பங்குதாரர்.
1996இல் தொடங்கப் பட்ட நாசரேத்து ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில் நுட்பம் பயிலகம் தொடங்கப்பட 10 ஆண்டுகளாக முயற்சி கண்டு வெற்றி கண்டவர்.
இப்பயிலகம் தனது வளர்ச்சியால்,
நாசரேத்து ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மற்றும் தூய லூக்கா செவிலியர் கல்லூரி கண்டது.
இவ்உயரங்களுக்கு உதவியாக, பின்புலமாக, நாசரேத்து சேகரம் இயங்க இயக்கிய இயக்குனர்
துரை.
2003இல் உதயமான தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு அச்சாரமாக,
1975களிலேயே நாசரேத் திருமண்டலம் உருவாக வேண்டுமென்று, நெல்லை திருமண்டலச் செயற்குழுவில் போர்க்குரல் எழுப்பியவர் நாசரேத்து துரை.
இவரது தொடர் முயற்சிகள் 2003-இல்,தூத்துக்குடி நாசரேத்து திருமண்டலம் என்ற வடிவம் ஆயிற்று..
நாசரேத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு,நாசரேத்து பல்கலைக் கழகம் பரிணமிக்க வேண்டும் என்பது
அவரது வாழ்நாள் கனவு.
திராவிட இயக்கக் கொள்கைகளை
நெஞ்சில் சுமந்து,பின்பற்றி,
தந்தை பெரியாரின் சீடர் ஆகவும்,
மக்கள் தலைவர் வைகோவிற்கு உற்ற துணை ஆகவும் இருந்தவர்.
பிறர் பால் அன்பு என்பது அவர்
இதயத்தில் இருக்கும்..
ஒருபோதும் உதட்டில் இருக்காது..
புரிந்தவர்களுக்கு அது புரியும்.. புரியாதவர்களுக்கு
அவர் இன்றும் புதிர்தான்.
குறைவான சொற்களை உதிர்த்து நிறைவான செயல்கள் பதித்தவர்.
இது அவர் ஈட்டுகின்ற
வெற்றிக்கான தாரக மந்திரம்.
தன்னலத்தை விட தம் மண் நலம் பெரிது
எனக் கருதி செயல்பட்டவர்.
சமூக நல்லிணக்கம் எங்கும் பரவ வலியுறுத்தி வருகின்றவர். நேர்மையான அரசியல்,
அப்பழுக்கு அற்ற பொதுப்பணி,
தலைசிறந்த ஆளுமை,
இளைஞர்களை இயக்கும் ஆற்றல்,
கூட்டுத் தொழில் வித்தகம்,
கூட்டணி அரசியல் சூட்சமம்
இவைகள் அனைத்தும்
இவரது அடையாளங்கள்..
இலக்கு நிர்ணயம்..
அதை நோக்கிய பயணத்தில்
அர்ப்பணிப்பு..
சோர்வில்லா முயற்சி..
இவைகளுக்குப் பின் வருகின்ற வெற்றி.. இவைகளில் களிப்பும் கொள்ளாமல், களைப்பும் கொள்ளாமல்,
அடுத்த இலக்கை நிர்ணயித்து,
அதை நோக்கிய பயணம் தொடர்வது என்பதே இவர் எட்டிய
வெற்றியின் வழித்தடங்கள்.
நாசரேத்து துரை நாசரேத்தின் சிறந்த வழிகாட்டி
என்றால் அது மிகை ஆகாது.
அன்னாரின் மறைவு திராவிட இயக்கத்திற்கும்,
நாசரேத்து வட்டாரத்திற்கும்
ஈடு இணை அற்ற இழப்பு ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here