திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள வ உ சி யின் திருவுருவச்சிலைக்கு திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அனிதா R ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகிகள் ஒருவரான வ உ சிதம்பரனார் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள அவரது மார்பளக திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர் ஒன்றிய செயலாளர் செங்கோழிரமேஷ் நகர பொறுப்பாளர்கள் வாள் சுடலை மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் பரமன்குறிச்சி இளங்கோ மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைகோ மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் ராஜபாண்டியன் முன்னாள் கவுன்சிலர்கள் கோமோ முருகேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.