தெருவின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டியதை கண்டித்து பொது மக்கள் சாலைமறியல்

0
35
kovilpatti

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட செண்பகநகரில் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்காக பகுதியை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். தண்ணீரை வெளியேற்றுவதற்காக அப்பகுதியில் உள்ள தெருவின் மையப்பகுதியில் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் இரு பகுதியில் வசிக்கும் மக்களும் வெளியே செல்லமுடியமால் தவித்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்று கூறி கோவில்பட்டி – இலுப்பையூரணி சாலையில் தீடீரென அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் தெரிந்தவுடன் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் சாலை மறியலை கைவிட்டனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் மாணிக்கவாசகத்திடம் கேட்டபோது, பெட்டைகுளம் ஊருணி ரூ.4லட்சத்து20ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தி கரையோரம் உயர்த்தும் பணி நடைபெறுகிறது.

இதையொட்டி, அங்கு தேங்கியுள்ள நீரை வெளியே செல்வதற்கு ஏதுவாக பணி செய்யும்போது டி.எல்.எஸ். நகர்ப் பகுதிக்கு வந்துவிட்டது. இது தடுக்கப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்படும். மேலும், இந்த ஊருணி தூர்வாரப்பட்டு கரை உயர்த்தப்பட்டு கரையில் ஃபேவர் பிளாக் பதிக்கப்படவுள்ளது என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here