கள்ளத் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார்கள் – ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., எஸ் பி சண்முகநாதன் மீது அவரது உறவினர் புகார்

0
164
s.p.shanmuganathan

தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை ஊரை சேர்ந்தவர் எஸ்.பி.ஜெயபாண்டியன் மகன் எஸ். பி .ஜே.சுந்தரராஜன். திமுகவில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் இவர் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில்,”நான் மேலே கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருக்கிறேன். எனது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் எஸ்பி சண்முகநாதன் என்பவர் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்படி எஸ் பி சண்முகநாதன் என் மீது அரசியல் மற்றும் குடும்ப பகை காரணமாக விரோதம் கொண்டிருக்கிறார். மேலும் எஸ்பி சண்முகநாதன் மற்றும் அவரது மகன் எஸ்பி ராஜா என்பவரும் கடந்த சில மாதங்களாக நான் வீட்டில் இருக்கும்போது ம் சரி,வெளியில் போதும் வரும்போதும் சரி எனது காதுபட ’எங்களை மீறி இந்த ஊரில் அரசியல் செய்ய முடியாது’ என்றும் மீறி செய்தால் துப்பாக்கி வைத்து சுட்டு விடுவதாக அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இரு நபர்களும் இரண்டு கள்ளத்துப்பாக்கி வைத்துக்கொண்டு என் உயிருக்கு அச்சுறுத்தும் விதத்திலும், குடும்ப பகையின் காரணமாக கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இரண்டு கள்ளத்துப்பாக்கி இருப்பது கடந்த 6.4.2020 அன்று பண்டாரவிளை காட்டுப் பகுதியில் உள்ள எங்களது குடும்ப கோயிலான ஐயாக்குட்டி அய்யனார் கோவிலில் வைத்து மேற்படி இரு நபர்களும் சென்று துப்பாக்கியை வைத்து கோவிலில் சாமி கும்பிட்டு வந்தது தற்போது தெரியவந்த நிலையில் அவர்களிடம் கள்ளத்துப்பாக்கி இருப்பது ஊர்ஜிதமாகிறது.

மேற்படி இரு நபர்களும் அரசியல் பணபலம் மற்றும் ஆள்பலம் மிக்கவர் என்பதால் எந்த நேரத்திலும் என் உயிருக்கு என் குடும்பத்தார் உயிருக்கும் மேற்கண்ட நபர்களால் கள்ளத்துப்பாக்கி மூலம் அச்சுறுத்தல் இருக்கிறது.

ஏற்கனவே சண்முகநாதன் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 2008 ஆம் ஆண்டு கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக அதை கைப்பற்றியதாகவும் புகார் இருந்தது. இந்தநிலையில் 5 9 2020 அன்று காலை சுமார் 7 மணி அளவில் நான் வீட்டிற்கு அருகே நின்ற போது என் காதுபட வேண்டுமென்றே என்னை மீறி இந்த ஊரில் அரசியல் செய்தால் துப்பாக்கி வைத்து சுட்டு விடுவேன் என அவர்கள் கூறினார்கள்.

ஆகவே கனம் ஐயா அவர்கள் மேற்கண்ட இரு நபர்களிடம் உள்ள கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்து என் உயிருக்கும் என் குடும்பத்தார் உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்கும்படியும் மேற்படி இரு நபர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here