தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 10-வது அறிவியல் கண்காட்சி!

0
136
nazareth

நாசரேத்,டிச.02:தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 10-வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 10-வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் விதமாக பல்வேறு அறிவியல் படைப்புகளின் கண்காட்சியை காடன்குளம் ஜோசப் நடுநிலைப்பள்ளி முன்னால் முதல்வர் சார்லஸ் மற்றும் கல்லூரியின் தாளாளர் முத்தையா பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கி கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.

மாணவ மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்பின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இவ்விழாவில் ஆடை அலங்காரப் போட்டி, கழிவுகளிலிருந்து கலைபெருள்கள் செய்தல், நடனப் போட்டி, பலகுரல் பேசுதல், எழுத்துப்போட்டிகள் நடைபெற்றன.

200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகளை கல்லூரி தாளாளர் முத்தையா பிள்ளை கண்டு மாணவ,மாணவிகளின் திறமைகளை பாராட்டினார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிகளில் இருந்து 1000-க்கும்மேற்பட்ட மாணவ,மாணவிகள் கண்காட்சியை கண்டு களித்தனர். 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஜி.சுரேஸ்தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசினார். கல்லூரி தாளாளர் முத்தையாபிள்ளை சிறப்புரை ஆற்றினார்.மெட்ரிக் பள்ளிகளுக்கான போட்டிகளில் முதல்பரிசுக்கான கோப்பையை திசையன்விளை ஜெயராஜே‘ மெட்ரிக் பள்ளியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமிக் மெட்ரிக்குலேசன் பள்ளியும், மூன்றாம் பரிசுக்கான கோப்பையை வள்ளியூர் கிங்ஸ் சிபிஎஸ்இ பள்ளியும் பெற்றனர்.

அரசுப் பள்ளிகளுக்கான போட்டிகளில் முதல் பரிசுக்கான கோப்பையை விஜய அச்சம்பாடு செந்திலாண்டவர் அருள்நெறி உயர் நிலைப்பள்ளியும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசுக்கான கோப்பையை சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திசையன்விளை வருவாய் வட்டாட்சியர் பட்டமுத்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் துணை முதல்வர் விமலா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here