அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் மாற்றுகட்சியினர்.
கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர். செ.ராஜூ முன்னிலையில் விளாத்திகுளம் சின்னப்பன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பெயரில் வெம்பூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் உள்ளிட்ட 75பேர் திமுகவில் இருந்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இதே போன்று அமமுக கோவில்பட்டி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் ஓன்றிய கவுன்சிலர் பாலமுருகன் வெம்பூர் கூட்டுறவு சங்க தலைவர் சொளந்திரபாண்டியன். புதூர் யூனியன் ஓன்றிய கவுன்சிலர் சுகன்யா செல்வகுமார். கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்து நகர அம்மா பேரவைச் செயலாளர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.