நாசரேத்துரை உடலுக்கு வைகோ அஞ்சலி

0
242
vaiko

மதிமுக துனைப்பொதுச்செயலாளர் நாசரேத்துரை உடல்நலக் கோளாறு காரணமாக நேற்று முன் தினம் இறந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாசரேத் துரை உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசினார், ‘’எந்த இடத்தில் அண்ணன் நாசரேத் அவர்களின் மூன்றாவது மகள் நாலந்தாபிரபாகர் திருமணத்தை நடத்தி வைத்தேனோ அதே இடத்தில்.. வீட்டிற்கு வரும்போதெல்லாம் வாசலில் நின்று வரவேற்று விருந்து வழங்கி என்னை அன்பால் கட்டிப்போட்டவர். கொரோனா பிரச்னைக்கு முன்பாக நான் சந்தித்திருந்தேன். பல்வேறு பதவிகளில் இருந்தவர். எல்லோரும் போற்றக் கூடியவர்.

பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக் கொண்டவராக டாக்டர் கலைஞர் கரத்தை வலுப்படுத்தும் வகையில் வாழ்ந்தவர். இந்த துக்கத்திலிருந்து அவரது குடும்பம் எளிதில் வெளியே வரமுடியாது. கடந்த 27 ஆண்டுகளாக என் கண்ணுக்கு இனிமையாக இருந்தவர். என் நெஞ்சுக்கு உரமாக இருந்தவர். என்னுடைய முடிவை பரிபூரணமாக ஆதரிக்க கூடியவர்.

இனிமேல் நான் அவரை என்று பார்க்கப்போகிறேன். இந்த குடும்பத்தில் நான் ஒருவராக மதிக்கப்பட்டேன். அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இந்த பகுதி மக்களை கால்டுவெல் வளமாக்கினார். அவர் வழியில் அண்ணன் நாசரேத் துரை வாழ்ந்து காண்பித்தார். இந்த பகுதி மக்கள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தனர். அவரை உயிராக நேசிக்கிறசர்கள் இங்கே இருக்கிறார்கள்.

திமுக தலைவர் தளபதி உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அண்ணன் நாசரேத்துரைஅவர்களின் புகழ் என்னென்றும் நிலைத்து நிற்கும்’’ என்றார். பேசும்போது இடையிடையே துக்கம் தாங்காமல் வைகோ கண்ணீர் வடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here