சாத்தான்குளம் பகுதியில் 8பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி

0
251
sathankulam corona

சாத்தான்குளம், செப். 7-

சாத்தான்குளம் பகுதியில் 8பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அனைவரும் திருச்செந்தூர் கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு தற்போது மத்திய. மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்து வருகின்றனர். ஆனாலும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட வாலத்தூரில் ஒரு நபருக்கும், ராஜீவ்காந்தி நகரில் 5 நபருக்கும் திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி, மற்றும் சுகாதாரத்துறையினர் தொற்றுக்குள்ளானவர்களை திருச்செந்தூர் கரோனா சிகிச்சை வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ராஜீவ்காந்தி நகருக்கு யாரும் செல்லாத வகையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இதேபோல் படுக்கப்பத்தில் ஒரு நபருக்கும், உசரத்துக்குடியிருப்பில் ஒரு நபருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களும் கரோனா சிகிச்சை வார்டுக்கு அனுப்பப்பட்டனர். கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான பகுதிகளை சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கிருமிநாசினி தெளித்தும், தூய்மைப்படுத்தினர். அப்பகுதியில் பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here